யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து அஞ்சலி 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2018, 11:03 am

DIN

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார். 

மு.க.முத்துவுடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து இருந்தனர். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க. முத்து என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபகாலமாக உடல்நலக் குறைவின் காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அவர், தற்போது தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் எண்பது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.