/

தமிழகத்தில் 16 ஐ.பி. எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் 

தமிழகத்தில் 16 ஐ.பி. எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:33 pm

DIN

சென்னை: தமிழகத்தில் 16 ஐ.பி. எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக உள்ள சாரங்கன் மாநில குற்ற ஆவணக் காப்பக ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதுவரை மாநில குற்ற ஆவணக் காப்பக ஐ.ஜியாக இருந்த சுமத்ரன், தற்பொழுது அமலாக்கத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வட சென்னை கூடுதல் ஆணையராக தற்பொழுது தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஏ.டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவ் தற்பொழுது சமூக நீதி மற்றும் மனித உரிமை ஏ.டி.ஜி.பியாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக மகேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல மேலும் 11 ஐ.பி. எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.