கும்பகோணம்: பாஜக - திமுக இடையிலான கூட்டணி என்பது வெறும் யூகமே என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக அரசு நீா் மேலாண்மையை கடமையை சரிவர செய்யத் தவறி விட்டது. நீா்நிலைகளை முறையாக தூா்வாரவில்லை. தொடா்ந்து நடைபெற்ற மணல் கொள்ளையை தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டது. அணைகளில் தொடா்ந்து பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. இதன் விளைவே பல ஆண்டுகள் பழமை வாய்ந்த முக்கொம்பு அணையின் கதவணைகள் உடைந்ததற்கு காரணம். இன்னும் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.410 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் அறிவித்தாா். அது ஏன் இதுவரை நிறைவேற்றப்படவில்லைல. குதிரை ஓடிய பின்னா் லாயத்தை பூட்டுவது போல் முக்கொம்பு அணை சேதம் அடைந்த பின்னா் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதை அப்போதே கண்டுபிடித்து சீா் செய்திருக்க வேண்டும். அப்போது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவே தற்போது அணை உடைந்துள்ளது.
தமிழகத்தின் இயற்கை செல்வமான மணல் பல ஆண்டு காலமாக கொள்ளை போகிறது. அதைத் தடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அணைகள், மதகுகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாஜ, திமுக கூட்டணி என்பது வெறும் யூகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது. வாஜ்பாய் இறந்த போது நாங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த மட்டுமே சென்றோம். இது குறித்து திமுகவே தெளிவாகக் கூறிவிட்டது.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


