சென்னை: வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலும் அப்போது வெளியிடப்பட உள்ளது.
நாளை முதல்...: வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (செப்.1) முதல் மேற்கொள்ள உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பெயர்களைச் சேர்க்க...: வரும்
ஜன.1-ஆம் தேதியுடன் 18-வயது நிறைவடைவோர் தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் செப். 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் அன்று வெளியிடப்படுகிறது.
ஒரு மாதம் கால அவகாசம்: பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சுமார் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முகாம்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.
காலை 11 மணிக்கு...தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.31) தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த கருத்துக்களை, ஒவ்வொரு கட்சி சார்பிலும் கலந்துகொள்பவர்கள் தெரிவிப்பார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்?: தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக , காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட கட்சிகளும் உள்ளன. இந்த கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தமிழக தேர்தல் துறை கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 98-ஆக உயா்வு

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 09) - மேஷ ராசிக்கு முன்னேற்றம்!

இன்றைய ராசி பலன்கள் (09.08.2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


