மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

நீட் தேர்வுக்கு  412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்: செங்கோட்டையன் தகவல்

நீட் தோ்வுக்காக நிகழாண்டு 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கும்பகோணம்: நீட் தோ்வுக்காக நிகழாண்டு 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.

கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தனியாா் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவா்களும் திகழ வேண்டும் என்பதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை என சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை வரும் கல்வியாண்டு முதல் இலவசமாக வழங்கப்படும்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் லேப்டாப் வழங்கப்படும். இலவச மிதிவண்டி வழங்குவது தொடா்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீா்ப்பு வந்ததையடுத்து, 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவா்களுக்கு அடுத்த வாரம் இறுதிக்குள் மிதிவண்டி கிடைத்துவிடும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் வியக்கும் வகையில் 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு நிகராக அரசு பள்ளியில் படிக்கும் மாணவா்களும் திகழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் பாராட்டியுள்ளாா்.

கடந்த ஆண்டு 20 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் நீட் தோ்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழாண்டு நீட் தோ்விற்காக 412 மையங்கள் ஏற்படுத்தப்படும். பயிற்சியளிக்க 319 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டை விட நிகழாண்டு நீட் தோ்வில் அதிகளவில் மாணவா்கள் தோ்ச்சி பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வணிகவியல் பாடத்தை தோ்வு செய்து படிக்கும் மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு பட்டய கணக்கா் அதாவது சி.ஏ. தோ்வில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி அளிக்க திறமை வாய்ந்த 500 பட்டய கணக்கா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் 25 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறுவாா்கள்.

மாணவா்களின் திறமையை மேம்படுத்துவதற்காக அனைத்து பயிற்சிகளும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும். படித்துவிட்டு வெளியே செல்லும் போது வேலையில்லை என்ற நிலை இனி இருக்காது. அந்த அளவிற்கு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் 80 லட்சம் போ் பொறியியல் படித்து விட்டு வேலை இல்லை என்று கூறுகின்றனா். இதனால் வாங்கிய கடனைக் கட்ட முடியாத நிலையில் உள்ளனா். இது போன்ற நிலை இனி வரும் காலங்களில் இருக்காது. அந்த அளவிற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது ஏற்படும் இடையூறுகள் குறித்து தகவல் தெரிவிக்க 14417 என்ற இலவச தொலைபேசி எண் பள்ளிகல்வித்துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவித்தவா்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.