பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வாக்காளர் பட்டியல் திருத்தம்: அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


சென்னை: வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலும் அப்போது வெளியிடப்பட உள்ளது.
நாளை முதல்...: வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (செப்.1) முதல் மேற்கொள்ள உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பெயர்களைச் சேர்க்க...: வரும் 
ஜன.1-ஆம் தேதியுடன் 18-வயது நிறைவடைவோர் தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் செப். 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் அன்று வெளியிடப்படுகிறது.
ஒரு மாதம் கால அவகாசம்: பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சுமார் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முகாம்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.
காலை 11 மணிக்கு...தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.31) தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூட்டியுள்ளார்.  இந்தக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த கருத்துக்களை, ஒவ்வொரு கட்சி சார்பிலும் கலந்துகொள்பவர்கள் தெரிவிப்பார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்?: தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக , காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட கட்சிகளும் உள்ளன. இந்த கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தமிழக தேர்தல் துறை கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.