திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து: தமிழக அரசு  

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்த தகவலால் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:47 pm

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்த தகவலால் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் அதிகமான அளவில்  பணப் பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

அதுதொடர்பாக அத்தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷ் மற்றும் வைரக்கண்ணு மற்றும் அருண் நடராசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.    

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனையின் போது, ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான விபரங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டது. 

அந்த வழக்கிலும் நீதிமன்றம் அரசிடம் அறிக்கை கோரியிருந்தது. அதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் பேரில், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யயப்பட்டிருந்தது.   

அதேசமயம் இந்த வழக்கானது சரியான ஆதாரம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கின் எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யுமாறு கோரி திருவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.   

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்த தகவலால் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட வழக்கில், எப்.ஐ.ஆர் மார்ச் மாதேமே ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மற்றொரு வழக்கானது நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இவ்வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டது? இந்த வழக்கில் என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. 

அதுதொடர்பான விபரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.