இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழறிஞர் க.ப. அறவாணன் மறைவு: ராமதாஸ் இரங்கல்!

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான க.ப. அறவாணன் உடல்நலகுறைவால் இன்று சென்னையில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:57 pm

DIN


திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான க.ப. அறவாணன் உடல்நலகுறைவால் இன்று சென்னையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான க.ப. அறவாணன் உடல்நலக் குறைவால் செர்ன்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழறிஞர் அறவாணன் எளிய குடும்பத்திலிருந்து வந்து எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர். இளம் வயது வறுமை அவரது கல்வியையும், தமிழாராய்ச்சியையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. நான் மதிக்கும் தமிழறிஞர்களில் ஒருவரான வ.ஐ.சுப்பிரமணியத்தின் மாணவர்களில் ஒருவரான அறவாணன் இளம் வயதிலேயே சாதனைகளைப் படைத்தவர். ஒன்றரை ஆண்டுகளில் முனைவர் பட்ட ஆய்வை முடித்த அவர், 27 வயதில் கல்லூரி முதல்வர் ஆன சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு துணையாக இருந்தவர் அறவாணன். 2008-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சி, தமிழர் வளர்ச்சி ஆகியவை குறித்தே சிந்தித்து செயல்பட்டு வந்தவர்.

முனைவர் க.ப. அறவாணனின் மறைவு தமிழுக்கும், தமிழாராய்ச்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.