மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

ஜன. 3-இல் திமுக சார்பில் திருவாரூரில் ஊராட்சி சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி சபைக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Updated On :26 டிசம்பர் 2018, 1:27 am IST


திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி சபைக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
இந்த ஊராட்சி சபை கூட்டத்தை ஜனவரி 3-ஆம் தேதி திருவாரூரில் மு.க.ஸ்டாலினும், ஈரோட்டில் பொருளாளர் துரைமுருகனும், காஞ்சிபுரத்தில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவும் தொடங்கி வைக்க உள்ளனர்.
மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், நிர்வாகத் தோல்விகளையும் பிரசாரப் பயணமாக எடுத்துச் செல்லக்கூடியது என்பதால் ஊராட்சி சபை கூட்டத்துக்கு தலைமை வகிக்க தலைமைக் கழகத்தில் இருந்து பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தப் பிரசாரத்தின்போது திமுக சார்பில் வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும், மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.