ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவில் செவ்வாய்க்கிழமை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
இதையொட்டி நம்பெருமாள் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு மணல் வெளியில் எழுந்தருளினார். அங்கு, வையாளி கண்டருளிய நம்பெருமாள் நான்கு திசைகளிலும் சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என்ற பக்தி கரகோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, திருமங்கை மன்னனின் வம்சாவளியை சேர்ந்தோர் தெப்பக்குளம் நெடுந்தெருவிலிருந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் திருமங்கை மன்னன் வேடம் பூண்டு ஊர்வலமாக வந்தனர். அவர்கள் திருமங்கை மன்னன் செய்த வழிப்பறி திருட்டை போன்று நடித்தனர்.
இதையடுத்து இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு இரவு 8 மணி வரை அலங்காரம் அமுது செய்யத் திரையிடப்பட்டது.
பின்னர், அரையர் சேவை, திருப்பாவாடை கோஷ்டி மற்றும் வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை, உபயதாரர் மரியாதை நடைபெற்றது. இதையடுத்து இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 12.16 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்







