சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி எனும் கொள்கையுடன் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் ஏற்றத்துக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி தெளிவாகவும், நேர்மையாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும் தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மநீம கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல, அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, அதை உணர்ந்து கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்துக்காக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 575 -க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த நபரின் வெளியேற்றமும் பாஜகவை பாதிக்காது: நயினாா் நாகேந்திரன்

விவசாய நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கள் விற்பனை: விவசாயி மீது வழக்கு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



