விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்கள் 515 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பசுமை பட்டாசு குறித்த வழிகாட்டுதல் இல்லாததால், தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க மறுத்து, அதன் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஒண்டிப்புலி வருவாய் ஆய்வாளர் காஜா கரிம் நிவாஸ் சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பட்டாசுத் தொழிலாளர்கள் 515பேர் மீது சூலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!

மூன்று முடிச்சு தொடரில் இணைந்த நடிகை சஹானா!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் கைது!

முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



