கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், பெரும்பாலானோர் காவிரி கரையோரப் பகுதியிலும் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் காவிரியின் அழகைக் காண பரிசல் பயணத்துக்காக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
மேலும், தொங்குப் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம் மற்றும் மீன்கள் பண்ணை ஆகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள்
பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள அரசின் அடுத்த தலைமைச் செயலராக விஸ்வநாத் சின்ஹா நியமனம்!

மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி! எங்கே?

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


