புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு 

முன்னரே அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 டிசம்பர் 2018, 11:28 am

DIN

சென்னை: முன்னரே அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகமெங்கும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் பணிகளுக்காக சிறப்பு முகாம்களை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதன் முடிவில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.   

இந்நிலையில் முன்னரே அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வெள்ளியன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுள்ளார்கள். 

அவற்றில் எது சரியானது என்பதைக் கண்டறிந்து களைவது தேர்தலை ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. 

வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு என தனியான இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் சரிபார்ப்பு பணிகளில் எளிதாக செயல்பட முடியும். 

முன்னரே அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது. 

எனவே கூடுதல் அவகாசம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளோம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.