சென்னை: விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாடிககையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் டிராய் தகவல்; தெaரிவித்துள்ளது.
டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ந் தேதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பாணை வெளியிட்டது.
ஆனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் இன்னும் முழுமையாக செட்டாப் பாக்சுக்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிப்பது என்பது இயலாத காரியம் என்பதால், டிராயின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ஆம் தேதி முதல் விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாடிககையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக, டிராய் தரப்பில் ஆஜரான வக்கீல் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன் , இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அப்போது டிராய் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

