சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொது செயலாளர் அன்பழகனை, கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 96), வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த 28-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடுமையான சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நுரையீரலில் தங்கியுள்ள சளி குழாய் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்பழகனை, கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அவரை, மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

புதுச்சேரியில் கவியரங்கம், விருதுகள் வழங்கும் விழா

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


