மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மருத்துவமனையில் திமுக பொது செயலாளர் அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொது செயலாளர் அன்பழகனை, கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

News image
Updated On :30 டிசம்பர் 2018, 11:59 am

சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொது செயலாளர் அன்பழகனை, கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 96), வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த  28-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடுமையான சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நுரையீரலில் தங்கியுள்ள சளி குழாய் மூலம்  வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்பழகனை, கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  

தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அவரை, மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.