தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அம்பாளுக்கு சுடிதார்: அர்ச்சகர்கள் 2 பேர் பணி நீக்கம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து, வழிபாடுகள் செய்த கோயில் அர்ச்சகர்கள் 2 பேர்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:32 pm

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து, வழிபாடுகள் செய்த கோயில் அர்ச்சகர்கள் 2 பேர் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனர். 
இக்கோயிலில், அருள்மிகு அபயாம்பிகை தனி சன்னதி மயிலாடுதுறை வடக்கு ராமலிங்கத் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் குருக்கள் என்பவர் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகராகப் பணியாற்றி வருகின்றார்.இவரது மகன் ராஜ் குருக்கள்கடந்த 6-மாத காலமாக கோயிலில் பூஜைகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருள்மிகு அபயாம்பிகைக்கு,வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அணியும் ஆடைகளில் ஒன்றான சுடிதார் அணிவித்து, பூஜைகள் செய்துள்ளார். சுடிதாரில் அலங்கரிக்கப்பட்ட நிலையிலிருந்த அபயாம்பிகையை,வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்களில் சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலை தளங்களிலும் பரவிட்டனர்.க்ஷ் மேலும் கோயில் அர்ச்சகரின் இச்செயலுக்கு சிலர் கண்டணம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோயில் கண்காணிப்பாளர் எஸ்.குருமூர்த்தி மற்றும் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு,கோயில் அர்ச்சகர்கள் கல்யாணசுந்தர குருக்கள்(75) மற்றும் ராஜ்(45) குருக்கள் ஆகிய 2 பேரையும் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.