கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:50 pm

DIN

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஞாயிற்றுக்கிழமை மையம் கொண்டிருந்தது. இது தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செவ்வாய்க்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.