ஜெ. தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
ஜெ. தீபா வீட்டில் வருமான வரி அதிகாரி போல் நடித்து கைதான பிரபாகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜெ. தீபா வீட்டில் வருமான வரி அதிகாரி போல் நடித்து கைதான பிரபாகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வரும் ஜெ.தீபாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தி வந்த நபர் போலீஸ் விசாரணையின் போது தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்த தப்பியோடிய நபரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரன் என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். தீபாவின் கணவர் மாதவன் தான் தன்னை நடிக்க சொன்னதாகவும் அவர் வாககுமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சரணடைந்த பிரபாகரன் மீது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...