பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தென்சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரும், மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டன பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் விழுப்புரத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காஞ்சிபுரத்திலும் கண்டன பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.