யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தனது கட்சியின் பெயரைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்கும் நடிகர் கமல்! 

தனது கட்சியின் பெயரைப் பதிவு செய்ய நடிகர் கமல் தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2018, 8:22 am

DIN

சென்னை: தனது கட்சியின் பெயரைப் பதிவு செய்ய நடிகர் கமல் தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனது அரசியல் பிரவேசத்தினை வரும் 21 -ஆம் தேதி ராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து துவங்கப் போவதாக, நடிகர் கமல் முன்பே அறிவித்துள்ளார். அதே நாள் மதுரையில் பெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தனது கட்சியின் பெயரைப் பதிவு செய்ய நடிகர் கமல் தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளையோ அலலது நாளை மறு நாளோ கமல் நேரம் கேட்டுள்ளதாகவும், நாளை மறுநாள் அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நற்பணி இயக்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்ற நடிகர் கமல் நாளை மறுநாள்தான் திரும்புவதாக முதலில் திட்டம் இருந்தது. ஆனால் இதன் காரணமாக இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.