சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 23-ஆம் தேதி திமுக நடத்துவதாகத் திட்டமிட்ட அனைத்துக் கட்சிக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்கு வரும் 23-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அம்சங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க, முதல்வர் பழனிசாமி திங்கள் காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். தனது அறையில் முக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர், காவிரி நீர் பங்கீட்டு கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் பொழுது கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்டிப்பாக நிலை நாட்டப்படும். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 22ந் தேதி முதல் அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். இதில் பங்கு பெற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆலோசனையை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெளிவாக முடிவு எடுக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 23-ஆம் தேதி திமுக நடத்துவதாகத் திட்டமிட்ட அனைத்துக் கட்சிக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இத்தகவலை தெரிவித்த மு.க.ஸ்டாலின், அரசு நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


