கமலின் கட்சி வளர்வதற்கு வாய்ப்பு குறைவே: முன்னாள் மத்திய அமைச்சர் ஆருடம்! 

இன்று துவங்கவுள்ள நடிகர் கமலின் கட்சி வளர்வதற்கான வாய்ப்பு குறைவே என்று காங்கிரசினைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துளார். 
கமலின் கட்சி வளர்வதற்கு வாய்ப்பு குறைவே: முன்னாள் மத்திய அமைச்சர் ஆருடம்! 

பெங்களூரு: இன்று துவங்கவுள்ள நடிகர் கமலிaன் கட்சி வளர்வதற்கான வாய்ப்பு குறைவே என்று காங்கிரசினைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துளார். 

மதுரையில் நடிகர் கமல் இன்று தனது அரசியல் பயணத்தை துவக்கவிருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த   தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்ப மொய்லி இதுகுறித்து தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் இன்று துவங்கவுள்ள அவருடைய கட்சி வளர்வதற்கு ஏற்ப அரசியலில் பெரிய வெற்றிடம் இல்லை. அ.தி.மு.க. உடைந்து அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பலாம் என கமல் நினைத்திருக்கலாம். ஆனால் அது நடக்கும் என நான் நினைக்கவில்லை.  மேலும் சொந்த பலத்தில் அவரது கட்சி வளர்வதற்கும் வாய்ப்பு குறைவே.

தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரண்டு மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்து வருகின்றன. அத்தோடு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

எனவே இரண்டு முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தவிர, பிற பிராந்திய கட்சிகள் தலையெடுக்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com