

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், மார்க்சிஸ்ட்டின் கே. பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், சீமான், ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற சு. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். நிலத்தடி நீர் குறித்த எந்த ஆய்வும் தமிழகத்தில் நடைபெறவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கீட்டின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு. சம்பா பயிர்களை காக்கும் வகையில் காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.