சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 'பென் ட்ரைவ்', டிடிவி தினகரன் சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் செவ்வாயன்று ஒப்படைகப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையமானது மருத்துவர் பாலாஜி, தீபா உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக விசாரணை ஆணையம் சார்பில், நேரில் ஆஜராகி தன் வசமுள்ள ஆதாரங்களை அளிக்குமாறு டிடிவி தினகரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் பொருட்டு டிடிவி தினகரன் வசம் உள்ள விடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட 'பென் ட்ரைவ்' ஒன்றை, அவரது சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செவ்வாயன்று ஆணையத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


