மக்களை நோக்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டோம்: கமல் பேட்டி!
மக்களை நோக்கிச் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம் என்று தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


சென்னை: மக்களை நோக்கிச் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம் என்று தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தினை துவக்க உள்ளதாகவும், அன்றே தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல் முன்னதாக வார இதழ் ஒன்றில் தான் எழுதி வரும் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அவர் இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
காலை 11 மணிக்குத் துவங்கிய ஆலோசனை மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது. அந்த ஆலோசனையின் முடிவில், கமல்ஹாசன் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:
மக்களை நோக்கிச் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, வரும் பிப்ரவரி மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களும் மதுரை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்வது என்று முடிவு செயப்பட்டுள்ளது. அதற்கான இடங்களும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று மதுரையில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது நற்பணிமன்ற நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அதேபோல நற்பணிமன்ற செயல்பாடுகளையும் வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
மதுரையில் மாநாடு நடத்துவது குறித்த முடிவு பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு முன்னதாக முடிவு செய்யப்படும்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...