ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக, கோவை மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்.
சின்னக்கல்லாறில் 110 மி.மீ.: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவை மாவட்டம், சின்னக்கல்லாறில் 110 மி.மீ. மழை பதிவானது. கோவை மாவட்டம் வால்பாறையில் 90 மி.மீ., வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 80 மி.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 40 மி.மீ., மழை பதிவானது என்றார் அவர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வரையிலும், சில வேளைகளில் மணிக்கு 60 கி.மீ வரை வேகத்திலும் பலமான காற்று வீசக்கூடும். தென்தமிழக கடலோரங்களில் தென்மேற்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வேகத்திலும் சில வேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்தக் காற்று வீசக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...