குடிசைப் பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின்கீழ் ரூ.58,356 கோடியில் 9 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்-2023-இன் படி குடிசைப் பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின்கீழ் நகர குடிசைப் பகுதிவாழ் குடும்பங்களுக்கு ரூ.58,356 கோடி செலவில் 9.08 லட்சம் குடியிருப்புகள், வீடுகள் 2023-ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டு தமிழகத்தில் உள்ள நகரங்கள் குடிசைப் பகுதிகளற்றதாக மேம்படுத்தப்படும்.
இவற்றில், 4.80 லட்சம் குடியிருப்புகள், வீடுகள் மைய, மாநில அரசு நிதியுதவியுடன் கட்ட ரூ.19,537.67 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மீதமுள்ள 4.28 லட்சம் குடியிருப்புகள் ரூ.38,818.73 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வீட்டு வசதி புதிய திட்டம்: சென்னை நகரில் நதிகளின் கரையோரங்களில் வாழும் குடிசைப் பகுதி வாழ் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டும், அந்தப் பகுதிகளைப் பசுமைப் பகுதிகளாக மேம்படுத்துவதுடன், நதிகளின் கரையோரங்களில் அமைந்துள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 38 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும்.
மேலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீட்டுவசதி மாதிரி திட்டங்களை உருவாக்கி முன்னோடி திட்டங்களாகச் செயல்படுத்தப்படும். நிலப் பயன்பாடு மற்றும் வெளிசார்ந்த திட்டமிடுதல் ஆகிய பணிகளுக்கான தொழில்நுட்ப உதவி பெறுதல் போன்ற பணிகளைச் செயல்படுத்த ரூ.4,648 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு உலக வங்கி உதவி பெற மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிக்கு உலக வங்கியின் நிதியுதவி ரூ.3,348 கோடி மற்றும் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1,300 கோடி ஆகும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 1,792 பல்வேறு வகை குடியிருப்பு அலகுகள் ரூ.274.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை அரும்பாக்கத்தில் 7.14 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.690 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படும் என்றார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


