தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைந்துவிட்டது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நிதித்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டபின், தமிழக அரசின் வரி வருவாயை உயர்த்தும் வாய்ப்பு, மிகக் குறைந்து விட்டது. வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதற்கும் தமிழகத்தில் போதுமான வாய்ப்புகள் இல்லை. ஆனால், அதே நேரத்தில் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.
நிதி மேலாண்மை-தொடர் கட்டாயம்: மக்களிடம் எதிர்பார்ப்புகள் கூடி வருவதால் தமிழக அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களும், அதற்குத் தேவையான நிதியும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு புறம் வரி வசூலை உயர்த்துவதற்கான வழிகள் இல்லை. மறுபுறம், நிதித் தேவை மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த நிதிப் பற்றாக்குறை சூழ்நிலையில் நிதி மேலாண்மை செய்ய வேண்டிய சூழல் நமக்கு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
நிதிப் பகிர்வு குறைவு: மத்திய அரசிடமிருந்து கிடைக்கக் கூடிய நிதிப் பகிர்வும் போதுமான அளவு உயரவில்லை. யானைக்கு அன்னம் வேகிற வீட்டில் பூனைக்கு சோறில்லை' என்ற கதையாக தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதிப் பகிர்வு சதவீதம் குறைந்து விட்டது. இதனால், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.6,000 கோடி நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான்...: 2016-17-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் மத்திய அரசிடமிருந்து பெற்ற தொகை ரூ.32,537 கோடி. 2017-18 ஆம் ஆண்டில் அந்த மாநிலம் மத்திய அரசின் திட்டங்களுக்கு பெற்ற தொகை ரூ.71,161 கோடி. இது கிட்டத்தட்ட 119 சதவீத உயர்வு ஆகும். அதே போன்று, ராஜஸ்தான் மாநிலத்துக்கு மத்திய அரசின் திட்டங்களுக்காக 2016-17ஆம் ஆண்டில், மத்திய அரசு விடுவித்த தொகை ரூ.19,482 கோடி. ஆனால் அதே மாநிலத்துக்கு 2017-18-ஆம் ஆண்டில் மத்திய அரசின் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை ரூ.29,188 கோடி ஆகும்.
இதே காலகட்டத்தில் (2016-17) மத்திய அரசால் தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை ரூ.19,838 கோடி. இந்த திட்டங்களுக்கு 2017-18-ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவித்த தொகை ரூ.19,264 கோடி மட்டுமே.
அதாவது, தமிழகத்துக்கு 2016-17-ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட, 2017-18ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ள தொகை குறைந்துள்ள சூழ்நிலையில், பிற மாநிலங்களுக்கு கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
தொடர்ந்து முயற்சி: இந்நிலையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதி பெறுவதற்கு கடும் முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பீட்டுடன், உதய் திட்டத்தை நிறைவேற்றுவதால் ஆண்டு ஒன்றுக்கும் ஏற்படும் கூடுதல் வருவாய் செலவு ரூ.6,343 கோடியாகும். இதையும் சமாளித்து, 7-ஆவது ஊதியக் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை நிறைவேற்றி உள்ளோம். இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
2018-19-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தவிர பல்வேறு முக்கிய புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். துறை வாரியான பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் நிதி மேலாண்மையைப் பொருத்தவரை, வருவாய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்துக்குள்ளும், கடன் அளவை மாநில மொத்த உற்பத்தி அளவில் 25 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளை உறுதியாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


