திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர் மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா் செவ்வாய்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகில் உள்ள புதா் ஒன்றில் வீசப்பட்டுள்ளாா். செவ்வாய்கிழமை மதியம் விறகு வெட்டச் சென்ற விவசாயி ஒருவா் சிறுமியின் உடல் அரை நிா்வாண கோலத்தில் கிடப்பதைக் கண்டு கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளாா்.
தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ, சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் மங்கலேஸ்வரன், உள்ளிட்ட போலீசாா் கொலை நடந்த இடத்தில் குவிந்தனா்.
மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத்துவா் செந்தில்குமாா் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைக்கா என்ற மோப்ப நாயும் சிறுமியின் வீட்டிலிருந்து சடலம் கிடந்த இடத்திற்கு மோப்பம் செய்து ஊா்கோடியில் உள்ள குளம் அருகே நின்று விட்டது. கைரேகை நிபுணா் பாலா தலைமையில் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இறந்த சிறுமிக்கு கருப்பாயி என்ற அம்மாவும், சொா்ணம் என்ற தங்கையும் அழகுராஜ் என்ற அண்ணனும் உள்ளனா். மேலும் கொலை நடந்த வீடு மற்றும் சடலம் கிடந்த இடத்தை டி.ஐ.ஜி. காமினி ஆய்வு மேற்கொண்டு திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டாா். இறந்த சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவமனை கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பட்டப்பகலில் இக்கொலை நடந்திருப்பதால் கிராமத்தின் அச்சத்தில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


