மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்கிழமை இரவு நிலவரப்படி 100 அடியாக உயர்ந்தது.


மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்கிழமை இரவு நிலவரப்படி 100 அடியாக உயர்ந்தது.
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செவ்வாய்கிழமை இரவு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. காவிரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...