இந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
இது குறித்து கடலோரக் காவல்படை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. தமிழகம், ஆந்திர மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை இப்பிரிவு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பிராந்தியத்தின் தளபதியாக இருந்து வந்த ராஜன் பர்ஹோத்ரா கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு பிராந்தியத்தின் தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிழக்கு பிராந்தியத்தின் புதிய தளபதியாக பரமேஷ் சிவமணி நியமிக்கப்பட்டுள்ளார். பரமேஷ் சிவமணி திங்கள்கிழமை பொறுப்பேற்றார். அவருக்கு தற்போதைய தளபதி ராஜன் பர்ஹோத்ரா வாழ்த்துகள் தெரிவித்தார்.
புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற பரமேஷ் சிவமணி கடலோரக் காவல்படையில் சுமார் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பல்களான அவ்வையார்', விஸ்வாஸ்ட்', சமர்' ஆகிய கப்பல்களில் கேப்டனாக பணியாற்றியுள்ள பரமேஷ் சிவமணி, கடல்சார் வழி மற்றும் திசைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இதற்கு முன்பு புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமை அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது சேவையைப் பாராட்டி மதிப்பு மிகுந்த தட்ராஷக் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









