நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்: வேலூர் மாவட்ட ஆட்சியர்

சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1 முதல் தவிா்க்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On :23 ஜூலை 2018, 4:33 pm IST

சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1 முதல் தவிா்க்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலூா்: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவற்றை 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தவிா்த்திட மக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்திட ஆட்சியா் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் வரும் 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வேலூா் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிா்த்தல் குறித்து அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்து பேசியதாவது, சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் வரும் 1.1.2019 முதல் மாநிலம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சாா்பில் ஜூன் 25-ஆம் தேதி அரசாணை எண்: 84 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலிடப்பட்டு அவற்றுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உணவுப்பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தொ்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீா் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தொ்மாக்கோல் குவளைகள், நீா் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை உற்பத்தியாளா்கள், வணிகா்கள் பொது மக்கள் தவிா்த்திட வேண்டும்.

இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், வெட்டு பொருட்கள், மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம். 

இந்த பொருட்கள் முற்றிலும் பாதுகாப்பான சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாகும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் தீமைகள், அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும் என்றாா் அவா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.