மேட்டூர் அணையின் 85 ஆண்டுகால வரலாற்றில் 39-ஆவது முறையாக திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு அணை நிரம்பியது. அணை நிரம்பியதை அடுத்து 80 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
நடப்பாண்டில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
கடந்த 3 வாரங்களில் நீர்வரத்து அதிகம்: இந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி இரவு அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஜூலை 19-இல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
நிரம்பியது: இந்நிலையில், திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு மேட்டூர் அணையின் 85 ஆண்டுகால வரலாற்றில் 39-ஆவது முறையாக நிரம்பியது.
அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 93.45 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 68,489 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
5 ஆண்டுகளுக்குப் பின்...: 2013 ஆண்டுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியதாலும், உபரிநீர் வெளியேற்றப்படுவதாலும் ஆயிரக்கணக்கான மக்கள் மேட்டூர் அணையை வந்து பார்த்து செல்கின்றனர். அணை நிரம்பியதை அடுத்து அணையின் வலது கரையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இதில் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செம்மலை, பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
80 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு உபரிநீர் போக்கி வழியாக 7,500 கன அடியும், நீர் மின் நிலையங்கள் வழியாக 22,500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. திங்கள்கிழமை பகலில் தண்ணீர் திறப்பு 40 ஆயிரம் கன அடியாகவும், இரவில் 80 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



