மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வால்பாறையில் தொடரும் கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணைகள்

வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

News image

தொடர் மழை காரணமாக அக்காமலை தடுப்பணை நிரம்பி வெளியேறும் நீர்.

Updated On :24 ஜூலை 2018, 12:57 am IST

வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை போதுமான அளவுக்குப் பெய்யாததால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதே போல் கடந்த ஆண்டு அணைகளும் நிரம்பவில்லை. 
இந்நிலையில் நிகழாண்டில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நான்கு ஆண்டுகளுக்குப் பின், 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நிரம்பி தொடர்ந்து முழு கொள்ளளவிலேயே உள்ளது. இதேபோல் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே உள்ள நீரோடைகளில் நீர் தேங்கியுள்ளது. 
வால்பாறை நகர் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கருமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள அக்காமலை தடுப்பணை கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வறண்டு காணப்பட்டது. தொடர் மழையால் ஒரு மாத காலமாகத் தடுப்பணை நிரம்பி வழிந்தோடுகிறது. சோலையாறு அணையில் இருந்து தொடர்ந்து பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படும் நீர் மூலம் சமவெளிப் பகுதி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.