தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்: மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு வைரமுத்து கண்டனம் 

தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்: மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு வைரமுத்து கண்டனம் 

சென்னை: தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் அவரது உதவியாளர் பிரஹலாத் லோஹர் ஆகிய இருவரும், 14 வயது நிரம்பிய தலித் சிறுவர் இருவரையும் 8 வயது சிறுவன் ஒருவனையும் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து விளையாடியதற்காக கடுமையாக தண்டித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ஜால்கான் மாவட்டத்திலுள்ள வகாதி எனும் கிராமத்தைச் சேர்ந்த இச்சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக நடக்கச் செய்து, இருவரையும் அடித்து துன்புறுத்தியதுடன் அதனை விடியோ எடுத்துள்ளனர். தங்கள் உடலை இலை தழைகளால் மறைத்துக் கொண்டு சிறுவர்கள் கெஞ்சியபடி கதறி அழுத போதும், சிறிதும் இரக்கமின்றி சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த விடியோ காட்சி வலைத்தளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

மராட்டியத்தில் கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். குளிக்கவில்லையே என்று தலித்துகளை முன்பு தண்டித்தார்கள். குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள். தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com