எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேலூர் மக்களுக்காக.. சதாப்தி விரைவு ரயில் இனி காட்பாடியில் நின்று செல்லும்

சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் காட்பாடியில் இனி நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 6:50 am

DIN

சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் காட்பாடியில் இனி நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து அந்த ரயில் சேவையை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை காட்பாடியில் புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சதாப்தி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. 

எனினும், இந்த விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாமல் சென்றது. அந்த விரைவு ரயில் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரயில் பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று சதாப்தி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சதாப்தி ரயில் காட்பாடியில் நின்று செல்வதை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பின்னர், மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, எம்.பி.க்கள் கோ.அரி (அரக்கோணம்), செங்குட்டுவன் (வேலூர்) ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

அதிமுகவின்  மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் பெரும் முயற்சியால் சதாப்தி விரைவு ரயில் காட்பாடியில் நின்று செல்ல உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், வேலூர், காட்பாடி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றனர்.

இந்த ரயில் தினமும் காலை 8.53 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்து, காலை 8.54 மணிக்கு புறப்படும். அதே போல், கோவையில் இருந்து சென்னை மார்க்கமாகச் செல்லும் சதாப்தி விரைவு ரயில் இரவு 8.14 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்து, இரவு 8.15 மணிக்கு புறப்படும். இது சோதனை ஓட்டமாக 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்பட்டு பிறகு நடைமுறைபடுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.