சென்னை: உடல்நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்காக 'பிடர் கொண்ட சிங்கமே பேசு' என்று தொடங்கும் கவிதையை, கவிஞர் வைரமுத்து வாசித்துக் காட்டும் விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட கருணாநிதி டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு, கோபாலபுரம் இல்லத்திலேயே கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறார். அந்தக் கருவியை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கருணாநிதிக்குப் பேச்சு பயிற்சியும் அவ்வப்போது கொடுத்து வருகின்றனர்.
கடந்த 1-ஆம் தேதி திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளன்று கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஸ்டாலின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு அவருக்கு கருணாநிதி வாழ்த்துக் கூறினார். அவருடன் உதயநிதியம் கருணாநிதியிடம் உரையாடும் விடியோ காட்சிகள் வெளியாகி, திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்காக 'பிடர் கொண்ட சிங்கமே பேசு' என்று தொடங்கும் கவிதையை, கவிஞர் வைரமுத்து நேரில் அவருக்கு வாசித்துக் காட்டும் விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை கவிஞர் வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இது அனைவராலும் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகிறது.
விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


