
சென்னை: ரத யாத்திரையால் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது என்று இமயமலை ஆன்மீகப் பயணத்திற்குப் பின் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பத்து நாட்கள் ஆன்மீகப் பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். தனது பயணத்தில் ஹிமாச்சல் மாநிலம் தர்மசாலா, ரிஷிகேஷ், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அவர் சென்றிருந்தார்.
இந்நிலையில் தனது ஆன்மீகப் பயணம் முடிந்து அவர் செவ்வாயன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
மன நிம்மதி வேண்டி நான் இமயமலை சுற்றுப்பயணம் சென்றேன். தற்பொழுது மிகவும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன்.
தமிழகம் எப்போதுமே ஒரு மதச் சார்பற்ற நாடு.
தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரை மூலம் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது.
எனவே இதன் மூலம் யாரும் பாதிக்கப்படாமல் அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கும் என்று நம்புகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.