சென்னை டிஜிபி அலுவலகத்தின் வெளியே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர்கள் கணேஷ் (28), மற்றும் ரகு(29) ஆகியோர் புதன்கிழமை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஜாதி ரீதியாக ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் செயல்பட்டு தொடர்ந்து பணி செய்யவிடாமல் துன்புறுத்துவதாகவும், தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்வதாகவும், விடுமுறை கேட்டால் கூட மது வாங்கி தர சொல்லி ஆய்வாளர் சீனிவாசன் வற்புறுத்துவதாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறை கூறினர்.
பின்னர் தங்களது கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி அவர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். இதை அப்பகுதியில் நின்ற காவலர்கள் கவனித்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் இருவரும் டிஜிபி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.
இது தொடர்பாக டிஜிபி அலுவலக அதிகாரிகள் தரப்பில் கூறியது: பணியில் இவர்கள் இருவரும் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்கள் தெரிவித்த பிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆயுதப் படை காவலர்கள் கணேஷ் மற்றும் ரகு ஆகியோர் மெரினா காவல் நிலைய போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


