முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்தம்: கோவாவில் கோலாகலம்!

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளித் தோழியும் பிரபல வைர வியாபாரியின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும்.. 
முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்தம்: கோவாவில் கோலாகலம்!
Published on
Updated on
1 min read

கோவா: இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளித் தோழியும் பிரபல வைர வியாபாரியின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் சனிக்கிழமையன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது

நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆகாஷ் அம்பானி (26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

அதேபோல் மிகப்பெரிய வைர விற்பனை நிறுவனமான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மூன்றாவது மகள் ஸ்லோகா மேத்தா. இவர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயன்ஸில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தற்போது ரோஸி புளூ அறக்கட்டளை அமைப்பில் நிர்வாக இயக்குநராக ஸ்லோகா மேத்தா செயல்பட்டு வருகிறார்.

ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும், மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதாகக் கூறப்படுகிறது.இருவரின் பள்ளிக் காலத்தில் இருந்தே இரு குடும்பத்தாருக்கும் நன்கு பழக்கம் என்பதால் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தாவின் திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் சனிக்கிழமையன்று  நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்களும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

எனினும் தற்பொழுது சமூகவலைதளங்களில் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன இவர்களது திருமணம், திருமணம் டிசம்பர் மாதத்தில் நடக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com