சென்னை: பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் பூட்டை உடைத்து 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர்களுக்கு பொன்குமார், நாகராஜ் ஆகிய மகன்களும், கிரகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கிரகலட்சுமி நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியாவார்.
இவருக்கும் நடிகர் பிரசாந்த்க்கும் 2005-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு. ஆனால் தனது முதல் திருமணத்தை மறைத்து தன்னை கிரகலட்சுமி இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றம் சாட்டி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பிரசாந்த் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கின் முடிவில் அவர்களது திருமணம் செல்லாது என்று நீதின்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டிலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, பிரசாத்துக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் கிரகலட்சுமியின் மாம்பலம் வீட்டில் செவ்வாயன்று 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் இந்த துணிகர செயலை நிகழ்த்தியுள்ளனர். தற்பொழுது இது குறித்து மாம்பலம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாதுகாப்புக் கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி: மதுரையில் கொண்டாட்டம்

கட்டுக்குடிபட்டியில் மஞ்சுவிரட்டு

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


