பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

விஐடியில் பி.டெக். படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புக்கான சேர்க்கை புதன்கிழமை தொடங்கியது. கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கான உத்தரவுகளை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்

விஐடியில் பி.டெக். படிப்புக்கான சேர்க்கை ஆணையை மாணவரிடம் வழங்கிய வேந்தர் ஜி.விசுவநாதன். 

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புக்கான சேர்க்கை புதன்கிழமை தொடங்கியது. கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கான உத்தரவுகளை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். 
விஐடியின் வேலூர், சென்னை, போபால், ஆந்திர மாநிலத்தின் அமராவதி ஆகிய வளாகங்களில் பி.டெக். மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல், பயோ டெக்னாலஜி, பயோமெடிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. 
இப்படிப்புகளில் உள்ள 7 ஆயிரத்து 985 இடங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் 4 முதல் 16-ஆம் தேதி வரை இணையதள முறையில் துபை, குவைத், மஸ்கட், கத்தார் ஆகிய வெளிநாடுகளிலும், இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும் நடைபெற்றன. இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் www.vit.ac.inஎன்ற இணையதளத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 
நுழைவுத் தேர்வு முடிவின் தகுதி அடிப்படையில் சேர்க்கை ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு விஐடி வேலூர், சென்னை, போபால், அமராவதி ஆகிய 4 வளாகங்களிலும் புதன்கிழமை ஒரேநேரத்தில் தொடங்கியது.
நுழைவுத் தேர்வில் முதல்கட்டமாக 1 முதல் 8 ஆயிரம் வரை தரவரிசை பெற்றவர்களுக்கு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. 8,001 முதல் 14,000 வரை வியாழக்கிழமையும், 14,001 முதல் 20,000 வரை வெள்ளிக்கிழமையும் கலந்தாய்வு நடக்கிறது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், மதுரையைச் சேர்ந்த உமங்சிங்கல் என்ற மாணவருக்கு பி.டெக். கணினி அறிவியல் படிப்பில் சேர்வதற்கான முதல் சேர்க்கை ஆணையை வழங்கினார். 
இதில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ஆனந்த் ஆ.சாமுவேல், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், அட்மிஷன் இயக்குநர் கே.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.