எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விழுப்புரம் மாவட்டத்தில் மே 18-இல் ஆளுநர் ஆய்வு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார். 

Updated On :14 மே 2018, 9:05 pm

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார். 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னையில் தனது வழக்கமான பணிகளுடன், அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 
இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (மே 18) காரில் வரும் அவர், வானூர், ஆரோவில், கோலியனூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் அன்று மாலை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.
இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை வருகிறார். 
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி, பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.