கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டம் சாத்தியமா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்க கோதாவரி -காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது' என, சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.
கோதாவரி - காவிரி இணைப்பது பற்றி 1970 -களில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே திட்டங்கள் தீட்டப்பட்டன. அப்போதே அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அப்போதும், அதற்குப் பிறகும் எப்போதெல்லாம் காவிரிப் பிரச்னையில் துரோகம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தை ஏமாற்றுவதற்கான கருவியாக மட்டுமே இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஏமாற்றி வரும் நிலையில், கொந்தளித்துள்ள தமிழக மக்களையும், விவசாயிகளையும் சமாதானம் செய்வதற்காகத்தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்வைக்கிறது. கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டம் ஐந்து மாநிலங்கள் தொடர்புடையது. கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதே சாத்தியமாகாத நிலையில், 4 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது சாத்தியமா?
குறுவைப் பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பாசன மாவட்டங்களில் பேரழிவு காத்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் என்று அன்புமணி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை

தோ்தல் களத்தில் அதிமுக அணிக்கு முதலிடம்: ஜி.கே. வாசன்

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


