மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.100 கோடிக்கு விற்பனை

தமிழகத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக, ரூ.100 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

News image
Updated On :14 மே 2018, 8:12 pm

தமிழகத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக, ரூ.100 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். சென்னை அண்ணாநகர் சிந்தாமணி கூட்டுறவுச் சிறப்பு அங்காடியில் அமைச்சர் ராஜு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
தரமான காய்கறிகளைக் குறைந்த விலையில் பொது மக்கள் பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் இப்போது 72 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளும், 3 நகரும் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், இதுவரை சுமார் ரூ.100 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விலை கட்டுப்படுத்தும் நிதியம்: அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வின் போது அதனைக் கட்டுப்படுத்தி பொது மக்கள் குறைந்த விலையில் பொருள்களைப் பெற்றிட கூட்டுறவுத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.100 கோடியில் விலை கட்டுப்படுத்தும் நிதியம் ஏற்படுத்தப்பட்டது.
இதன்மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயரும் போது அந்தப் பொருள்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு அரிசி, புளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை உயர்ந்த போது அவை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
கூட்டுறவு மருந்தகம்: கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்களில் 15 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொது மக்கள் அதிகளவில் இதனால் பயனடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.700 கோடி அளவுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் ராஜு.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆர்.பழனிசாமி, கூடுதல் பதிவாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.