திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதிக்கு உடல் அசைவுகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின்றி எதுவும் அசைவதில்லை. அரை நூற்றாண்டுக்கால அரசியல் வரலாற்றில் இந்தியாவில் வேறெந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமைகளைக் கொண்டவர் அவர். எப்போதெல்லாம் மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் நெருக்கடிகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் அவர் வகுத்தளிக்கும் வியூகங்களே தீர்வுகளாக அமைந்து வந்துள்ளன.
கருணாநிதி தனது 95-ஆவது பிறந்த நாளை ஜூன் 3-ஆம் தேதி கொண்டாட உள்ளார். இந்த நாளை திமுகவினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். திருவாரூரில் உள்ள அண்ணா திடலில் ஜூன் 1-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்களும், நானும் பங்கேற்க உள்ளோம். கூட்டத்தில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் தொடங்கிய தமிழக அரசு!

தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம்!

யானை தாக்கியதில் ஒருவர் பலி! கோயில் திருவிழாவில் பரபரப்பு! | Kerala
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


