சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. இன்று காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டகாரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பத்து பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செவ்வாய் மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
சட்டத்தை மதிக்காமல் தொடந்து தூத்துக்குடியை மாசுபடுத்தி வரும் வேலையில் ஸ்டெர்லைட் ஈடுபட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய போராட்டக்காரரகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது.
தூத்துக்குடி சம்பவத்தை தமிழகம் என்றைக்கும் மறக்காது.
இது போன்ற மக்கள் போராட்டங்களுக்கு ரத்தத்தினால் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று அரசு எண்ணக் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலையினை மூட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். மேலிடத்தில் அனுமதி தராமல் எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கும்?
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அரசும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


