இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, நீண்டகாலம் சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ராஜபட்ச அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ராஜபட்ச, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அழுத்தத்தை உலக நாடுகளிடையே குறைக்கவும் இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார். அவர் எந்தக் காலத்திலும் தமிழ் இனத்தால் மன்னிக்கப்பட முடியாக, ஒரு இனப் படுகொலைக்காரர் என்றார் வைகோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







